கானா இசைவாணியா இது? - ஆளே மாறிட்டாங்க
ADDED : 754 days ago
சென்னையை சேர்ந்த இசைவாணி தனது கானா பாடல்களால் பல இசை மேடைகளை அலங்கரித்து வருகிறார். இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து பிபிசி செய்தி நிறுவனம் கவுரவப்படுத்தியது. பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக நுழைந்த இசைவாணி அதன்பின் இன்னும் பிரபலமானார். இசைவாணி தற்போது ஆளே முற்றிலுமாக மாறிவிட்டார். கருப்பு குயிலாக இருந்த அவர், லுக்கில் பல மாற்றங்களை செய்து சிகப்பாக ஜொலிக்கிறார். கானா குரலில் கலக்கிக் கொண்டிருந்ததை தாண்டி இளையராஜா பாடலுக்கு தனது மென்மையான குரலில் பாடலை பாடியிருக்கிறார். இசைவாணியின் அந்த இனிமையான குரலையும், அவரது லுக்கில் இருக்கும் மாற்றங்களையும் பார்த்து ரசிகர்கள் இசைவாணியா இது ஆளே மாறிட்டாங்களே? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.