கோலகலமாக முடிந்த காயத்ரி யுவராஜ் சீமந்தம்
ADDED : 768 days ago
சின்னத்திரை நடிகையான காயத்ரி, நடன கலைஞர் யுவராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் பல வருடங்கள் கழித்து 2வது முறை கர்ப்பமாகியிருக்கிறார் காயத்ரி. பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் அண்மையில் அவர் நடித்து வந்த மீனாட்சி பொண்ணுங்க உள்ளிட்ட சில சீரியல்களில் இருந்து விலகினார். இந்நிலையில் காயத்ரியின் சீமந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்கள் உட்பட பலரும் காயத்ரிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.