உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆதிகுணசேகரனாக இனி வேல ராமமூர்த்தி? - உண்மை என்ன?

ஆதிகுணசேகரனாக இனி வேல ராமமூர்த்தி? - உண்மை என்ன?

எதிர்நீச்சல் தொடரில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். அதுமுதலே அவர் நடித்து வந்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் இனி யாரால் நடிக்க முடியுமென பெரிய விவாதமே சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆதிகுணசேகரனாக பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளதாக செய்திகள் வைரலாகி வந்தது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, 'சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !