ஜப்பான் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
ADDED : 867 days ago
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜப்பான்'. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியின் மூலம் முழுவதும் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணி தொடங்கி உள்ளது. கார்த்தி டப்பிங் பேசும் வீடியோ உடன் இதை அறிவித்துள்ளனர்.