அனிருத் குரலில் லியோ இரண்டாவது பாடல்
ADDED : 767 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படம் உலகமெங்கும் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இப்படத்திலிருந்து அனிருத் இசையில் விஜய் பாடி வெளிவந்த 'நான் ரெடி' பாடல் வெளியாகி பல சர்ச்சைகள் பெற்றாலும் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தற்போது வருகின்ற செப்டம்பர் 18ம் தேதி அன்று லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் இது ஒரு காதல் பாடல் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.