800 கோடி கடந்த 'ஜவான்', 1000 கோடியைக் கடக்குமா ?
ADDED : 761 days ago
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'ஜவான்'. இப்படம் பத்து நாட்களில் 797 கோடி வசூலித்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய அளவில் 11 நாட்களில் 400 கோடி வசூலை சீக்கிரத்தில் கடந்துள்ள படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த 'பதான்' படம் மற்றும் சன்னி தியோல் நடித்த 'கடார் 2' படமும் 12 நாட்களில் 400 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தது. அந்த சாதனையை 'ஜவான்' முறியடித்துள்ளது.
தமிழ், மற்றும் தெலுங்கில் மட்டும் இப்படம் சுமார் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. நேற்றைய வசூலுடன் 800 கோடியைக் கடந்துள்ள இப்படம் 1000 கோடியை எப்போது கடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.