அமைதியை தேடி பயணம் செய்யும் ஸ்ருதி சண்முகப்பிரியா
ADDED : 771 days ago
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகிய நிலையில் கணவரின் இழப்பு ஸ்ருதி சண்முகப்பிரியாவை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அந்த இழப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள பலவித முயற்சிகளை எடுத்த அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது மனநிலை குறித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது புதிய பயணத்தை தொடங்கியுள்ள ஸ்ருதி, தனது கணவருடன் நினைவுகளோடு காட்டில் அமைதியை தேடிச் செல்கிறார். வைல்ட் லைப் போட்டோகிராபராக காட்டுக்குள் கேமராவுடன் பயணம் செய்யும் ஸ்ருதி சில புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு தன்னை துன்பத்திலிருந்து மீள உதவி செய்த பலருக்கும் நன்றி சொல்லியுள்ளார்.