செப்., 21ல் ‛தி ரோட்' டிரைலர்
ADDED : 749 days ago
அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'தி ரோட்'. சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை எ.எ.எ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.