உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோதலும் காதலும் சீரியலிலிருந்து விலகிய பவாஸ் சயானி

மோதலும் காதலும் சீரியலிலிருந்து விலகிய பவாஸ் சயானி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் ஆதி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் பவாஸ் சயானி நடித்து வருகிறார். இவர் கயல் தொடரிலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடர் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டு வருவதுடன் ஆதியாக நடிக்கும் பவாஸுக்கும் ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்து வந்தது.

இந்நிலையில், நடிகர் பவாஸ், ‛மோதலும் காதலும்' தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தனது அறிவித்துள்ளார். அவரது பதிவில், 'சில எதிர்பார்க்க முடியாத சூழலால் மோதலும் காதலும் தொடரிலிருந்து நான் விலகிவிட்டேன். இதுபோல் ஒரு நல்ல ப்ராஜெக்டில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. வேறொரு சீரியலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அன்புடன் ஆதி' என்று கூறியுள்ளார்.

அதேசமயம் அவர் கயல் சீரியலை விட்டு விலகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !