சித்தா படத்தில் சந்தோஷ் நாராயணன்?
ADDED : 763 days ago
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இப்படத்திற்கான பாடல்களை திபு நினன் தாமஸ் மற்றும் பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் என இருவரும் இசையமைத்துள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி அன்று இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இப்போது இதிலிருந்து 'உனக்கு தான்' என்கிற ஸ்பெஷல் ப்ரொமொ பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த குறிப்பிட்ட பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியுள்ளார். இந்த மியூசிக் வீடியோவை ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய தீரஞ் வைத்தி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.