உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கேஜிஎப் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இப்படம் முதலில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இடையில் கிறிஸ்துமஸ் வெளியீடு என கூறி வந்தனர்.

இந்நிலையில் டிசம்பர் 22ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறை ஆகியவை வரும் என்பதால் படத்தின் வசூலுக்கு சிறப்பாக இருக்கும் என்று தேர்வு செய்துள்ளார்கள்.

அந்த சமயத்தில் தங்களது படங்களை வெளியிடத் தயாராக இருந்தவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !