துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட்
ADDED : 763 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாகம், துருவ நட்சத்திரம் சாப்டர்-1 யுத்த காண்டம் என்ற பெயரில் நவம்பர் 24ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்திற்கு சென்சார் போர்டு 11 இடங்களில் கத்திரி போட்டு, யு-ஏ சான்று அளித்துள்ளனர்.