எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி
ADDED : 732 days ago
எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கேரக்டரில் காமெடியில் கலக்கி வரும் ஹரிப்ரியா, தனக்கு அறிவுரை செய்தால் பிடிக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில், 'நாம் ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது உதவி செய்ய முன் வராதவர்கள், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மட்டும் அட்வைஸ் பண்ண தேவையில்லை. நான் எவ்வளவோ பிரச்னைகளை தாண்டித்தான் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். தலைக்கனமாக சொல்லவில்லை. என்னுடைய இத்தனை வருட பயணத்தில் நான் இங்கு சென்றால் இடிக்கும் அங்கு சென்றால் வலிக்கும் என்று படிப்படியாக கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். அதனால் இனி வரும் காலத்தில் என்னை நானே பார்த்துக் கொள்வேன். எனக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை' என்று கூறியுள்ளார்.