இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
ADDED : 730 days ago
சினிமாவை விட சின்னத்திரையில் பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக நடித்து வருகிறார் ஸ்ருதி ராஜ். அதிலும், சீரியல் தான் இவருக்கு அதிக புகழ் வெளிச்சத்தை பெற்று தந்தது. கிட்டத்தட்ட 43 வயதை நெருங்கியுள்ள ஸ்ருதிராஜுக்கு இப்போது வரை திருமணமாகவில்லை. ஆனால், இளமை ததும்பும் அழகில் புதிய தலைமுறை நடிகைகளையே தூக்கி சாப்பிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அண்மையில் நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்ருதி ராஜின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவரது அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் 'பொண்ணு கேட்டு வரலாமா செல்லம்?' என கமெண்ட்டில் காதல் தூது அனுப்பி வருகின்றனர்.