உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழுக்கு வரும் பிராச்சி தெஹ்லான்

தமிழுக்கு வரும் பிராச்சி தெஹ்லான்

இந்தியாவின நட்சத்திர கூடைபந்து விளையாட்டு வீராங்கணை பிராச்சி தெஹ்லான். காமன்வெலத் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் அவர் ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தன் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு பஞ்சாபி திரைப்படத்தில் நடித்தார். மம்முட்டியின் 'மாமாங்கம்' என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். தற்போது 'திரிசங்கு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் இரண்டாம் பாகம் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க, மரகதமணி இசையமைக்கிறார். தோட்டா தரணியும், அவரது மகள் ரோகிணி தோட்டா தரணியும் கலை இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். படத்தின் நாயகியாக புதுமுக நடிகை நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்கிறார், சேத்தன் ஹீரோவாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !