நடிகர் நாசரின் தந்தை காலமானார்
ADDED : 739 days ago
நடிகர் நாசரின் தந்தை மெஹபூப் பாஷா, 95, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன், ஹீரோ, குணச்சித்ரம் என நடித்து வருபவர் நாசர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்தியாவில் பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார். இவரது தந்தை மெஹபூப் பாஷா செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் வசித்து வருகிறார். வயது மூப்பு மற்றும் உடல்நலத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது வீட்டிலேயே இன்று(அக்., 10) மறைந்தார்.