ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‛கிங்ஸ்டன்' : கமல் வெளியிட்ட அறிவிப்பு
ADDED : 728 days ago
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிகர் ஆக தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு 'கிங்ஸ்டன்' என தலைப்பு வைத்துள்ளனர். கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்கின்றார் . இப்படத்தை ஜி.வி.பிரகாஷின் பேர்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்று இந்த படத்தை பூஜையுடன் நடிகர் கமல்ஹாசன் க்ளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .