மாலத்தீவில் பிறந்தநாள் கொண்டாடிய பூஜா ஹெக்டே
ADDED : 731 days ago
முகமூடி படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டே, அதன் பிறகு சில தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்தார். இந்நிலையில் அக்டோபர் 13-ம் தேதியான நேற்று அவரது 33-வது பிறந்தநாள் ஆகும். இந்த பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் மாலத் தீவு சென்றுள்ளார். அங்குள்ள கடலில் போடப்பட்ட ஒரு மெத்தையில் தூங்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதோடு கேக் உடன் இருக்கும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார் பூஜாஹெக்டே. தற்போது கைவசம் புதிய படங்கள் இல்லாமல் இருக்கும் பூஜா ஹெக்டே, விரைவில் ஒரு ஹிந்தி படத்தில் ஆக்சன் ரோலில் நடிக்கிறார். அதற்காக தற்போது அவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.