உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ - காட்சிகள் ரத்தால், குறைந்த பிரிமியர் வசூல்

லியோ - காட்சிகள் ரத்தால், குறைந்த பிரிமியர் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோப்ர 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அமெரிக்காவில் அக்டோபர் 18ம் தேதியே இதன் பிரிமியர் காட்சிக்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி நடந்து வந்தது. சுமார் 9 லட்சம் யுஎஸ் டாலர் அளவில் முன்பதிவு நடந்தது.

இதனிடையே, ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவை திடீரென ரத்து செய்துவிட்டார்கள். குறித்த நேரத்தில் 'கன்டென்ட்' டெலிவரி நடக்காததே அதற்குக் காரணம். தயாரிப்பு நிறுவனத்தின் தவறு இது. ஐமேக்ஸ் காட்சிகளுக்கு அதிகமான முன்பதிவு நடந்திருந்தது. தற்போது அந்தக் கட்டணங்களை திருப்பி அளித்து வருகிறார்கள். இதனால், 9 லட்சம் யுஎஸ் டாலர் வசூல் என்பது 7 லட்சம் யுஎஸ் டாலராக குறைந்துவிட்டது.

முன்பதிவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சாதனைக்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !