உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டைகர் 3 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டைகர் 3 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப் இருவரும் இணைந்து 'டைகர்' மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர். இம்ரான் ஹாஸ்மி வில்லனாக நடித்துள்ளார். மனிஷ் சர்மா இயக்கும் இந்த படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்சலில் இடம் பெறுவதால் நடிகர் ஷாரூக்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இப்போது இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் 'லேகே பிரபுகா நாம்' என்ற பாடல் வருகின்ற அக்டோபர் 23ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதன் தமிழ், தெலுங்கு பதிப்பு பாடலை பென்னி தயால், அனுஷா மணி இணைந்து பாடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !