விஜய்யின் லியோ படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவு!
ADDED : 760 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்த போதும், முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை செய்துள்ளது. அதோடு அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக உள்ளதால் லியோ படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் லியோ படத்தை பார்த்த ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் அப்படத்தை வாழ்த்தியுள்ள நிலையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் லியோ படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛லியோ படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக லியோ தாஸ் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.