உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இடுப்பழகு போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

மீண்டும் இடுப்பழகு போட்டோக்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் பிசியாக இருக்கிறாரோ இல்லையோ சோசியல் மீடியாவில் ரொம்ப பிசியாக இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் தங்களது படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வரும் நிலையில், இவரோ அவ்வப்போது தனது போட்டோ, வீடியோ குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நவராத்திரி ஸ்பெஷலாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன். அதோடு, உங்கள் வாழ்க்கை அன்பு மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் துடிப்பான வண்ணங்களால் நிரப்பப்படும் என்று சொல்லி அவர் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரம்யா பாண்டியன், மீண்டும் சிவப்பு நிற உடையில் தனது இடுப்பழகு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு வழக்கம்போல் ஏராளமான லைக் மற்றும் கமெண்டுகள் அவருக்கு கிடைத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !