கிச்சா சுதீப்புக்கு ஜோடியாகும் ஸ்ரீநிதி ஷெட்டி!
ADDED : 716 days ago
கன்னட நடிகர் கிச்சா சுதீப், ‛நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது 'மேக்ஸ்' எனும் தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் தனது 47வது படத்தில் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார் என அவரது பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இவர் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமானவர். தமிழில் 'கோப்ரா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.