கேர்ள் ப்ரண்ட் ஆக மாறிய ராஷ்மிகா!
ADDED : 725 days ago
நடிகை ராஷ்மிகா மந்தனா 'ரெயின்போ' படத்திற்கு பிறகு மீண்டும் 'தி கேர்ள் ப்ரண்ட்' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பாடகி சின்மயி கணவர் மற்றும் இயக்குனர், நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதற்கு முன்பு இயக்குனராக இவர் 'சில் லா சோ', 'மன்மததுடு' போன்ற படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஏசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தை க்ளிம்ஸ் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.