வேலையில்லா பட்டதாரி, 3 படங்களை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகும் வேங்கை
ADDED : 723 days ago
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் நடிக்கிறார். சமீபகாலமாக தனுஷ் நடித்த படங்களுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சமீபத்தில் தனுஷ் நடித்த ரகுவரன் பி.டெக்(வேலையில்லா பட்டதாரி), 3 ஆகிய படங்களை தெலுகில் ரீ-ரிலீஸ் செய்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
கடந்த 2011ம் ஆண்டில் ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வேங்கை'. இந்த படத்தை தெலுங்கில் 'சிம்மாபுட்ருடு' என தலைப்பில் அப்போது வெளியிட்டனர். இப்போது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இதன் தெலுங்கு பதிப்பைப் வருகின்ற நவம்பர் 10ந் தேதி அன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ ரிலீஸ் செய்கின்றனர். இதை சாய் லஷ்மி பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.