உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் அறிமுகமாகும் இந்துஜா

தெலுங்கில் அறிமுகமாகும் இந்துஜா

நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், ‛மேயாத மான்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து விஜய்யுடன் 'பிகில்', தனுஷூடன் 'நானே வருவேன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் புதிய படத்தில் நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. படப்பிடிப்பும் பூஜையுடன் துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்துஜா தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !