உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 43ல் இணைந்த பாவ கதைகள் ஒளிப்பதிவாளர்

சூர்யா 43ல் இணைந்த பாவ கதைகள் ஒளிப்பதிவாளர்

சூரரைப்போற்று படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவின் 43 வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கும் ஜி.வி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜோமான் டி ஜான் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். இந்த தகவலை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மலையாளத்தில் சார்லி, என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய ஜோமான் டி ஜான் தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான பாவ கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் குறும்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது சூர்யாவின் 43 வது படத்திலும் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார். அது மட்டுமல்ல பிரபல பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக கடந்த சில வருடங்களில் வெளியான சிம்பா, சூரியவன்சி, சர்க்கஸ் ஆகிய படங்களிலும் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !