பார்க்கிங் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 708 days ago
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி அன்று வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.