விடாமுயற்சி எந்த மாதிரியான கதைக்களம் கிடைத்த புதிய தகவல்
ADDED : 858 days ago
நடிகர் அஜித்குமார் துணிவு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தற்போது தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதனை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அரசியல் கதை களத்தை மையப்படுத்திய படம் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படம் ரோடு ஆக்ஷன் த்ரில்லர் படம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரோடு டிராவல் சம்மந்தப்பட்ட காட்சிகள் அதிகப்படியாக உள்ளதாம்.