ரஜினிக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்?
ADDED : 713 days ago
‛ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு பின் ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தாண்டு இந்த படம் துவங்க உள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக முதலில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்க இருந்ததாக லோகேஷ் சமீபத்தில் தெரிவித்தார். அந்த சமயத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லையாம். தற்போது இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாக சொல்கிறார்கள்.