சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடன இயக்குநர்
ADDED : 702 days ago
சினிமாவில் நடன இயக்குநரான ரேகா ஏஞ்சலினா தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். ரகுராம், கலா, பிருந்தா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ள அவர் சமீப காலங்களில் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். தாலாட்டு சீரியலின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சில்லுன்னு ஒரு காதல், திருமணம் ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். அவர் தற்போது சிங்கப் பெண்ணே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் தனக்கு வாய்ப்பளித்த குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.