உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாய்லாந்தில் 'லியோ' சக்சஸ் பார்ட்டி ?

தாய்லாந்தில் 'லியோ' சக்சஸ் பார்ட்டி ?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

அடுத்த இரண்டு நாட்களிலேயே விஜய் அவரது 68வது படத்திற்காக தாய்லாந்து நாட்டிற்கு படப்பிடிப்பிற்காகச் சென்றுவிட்டார். அவரது படங்கள் வெற்றி பெறும் போது குழுவினரை அழைத்து அவர் விருந்தளிப்பது வழக்கம். தற்போது படப்பிடிப்புக்காகச் சென்றுவிட்டதால், 'லியோ' படத்தின் முக்கியக் குழுவினரை தாய்லாந்துக்கு வரச் சொல்லியிருக்கிறாராம்.

அங்கு விஜய் 68 குழுவினருடனும் சேர்ந்து 'லியோ' வெற்றியை கொண்டாட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி விழாவில் கலந்து கொள்ளாத இசையமைப்பாளர் அனிருத், இந்த கொண்டாட்டத்திலாவது கலந்து கொள்வாரா என்பது இதுவரை தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !