மீண்டும் பெரிய திரைக்கு திரும்பிய ஜோமோல்
ADDED : 747 days ago
'ஒரு வடக்கன் வீரகதா' படத்தின் முலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோமோல். அதன் பிறகு மை டியர் முத்தச்சன், நிறம், உஷ்தாக், கேர்புல் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் சினேகிதியே, பிரியாத வரம் வேண்டும் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இப்போது பல வருட இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் நடிக்கிறார்.
ஐய்யப்பனின் புகழ்பாடிய 'மாளிகப்புரம்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விநாயகரின் புகழ்பாடும் 'ஜெய் கணேஷ்' படத்தில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன். இந்த படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் ஜோமோல். படத்தின் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். ரஞ்சித் ஷங்கர் இயக்குகிறார் படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.