காதலரை கரம் பிடித்த ஹர்த்திகா! குவியும் வாழ்த்துகள்
ADDED : 755 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹர்த்திகா. கேரளாவை சேர்ந்தவரான இவர், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். ஆனால், திரைத்துறையில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தற்போது தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது காதலர் குறித்து வெளிப்படையாக அறிவித்திருந்த ஹர்த்திகாவிற்கு கடந்த நவம்பர் 6ம் தேதி திருமணம் முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஹர்த்திகாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.