கல்யாணத்தில் முடியும் காதல் : காளிதாஸ் ஜெயராம் - தாரிணி நிச்சயதார்த்தம்
ADDED : 695 days ago
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல ஆண்டுகளாக நடித்து வரும் சீனியர் நடிகர் ஜெயராம். அவரும் மலையாள நடிகை பார்வதியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் இருக்கிறார்கள்.
30 வயதான காளிதாஸ் தமிழில் 'ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'இந்தியன் 2, தனுஷ் 50' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரும் மாடலிங் பெண்ணான தாரிணி காளிங்கராயரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இருவரது குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அதில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.