80ஸ் பில்டப் படத்திற்கு யு சான்றிதழ்
ADDED : 695 days ago
குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியதை தொடர்ந்து கல்யாண் தற்போது நடிகர் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் '80ஸ் பில்டப்'. ராதிகா பிரீத்தி நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் கே.எஸ். ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு சென்சார் குழுவில் இருந்து குடும்பத்துடன் பார்க்க தகுதி உள்ள திரைப்படம் என்பதால் 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.