ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்த கலையரசன்
ADDED : 694 days ago
நடிகர் கலையரசன் தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் கபாலி, ஜகமே தந்திரம், தானா சேர்ந்த கூட்டம், பத்து தல போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு மொழி படத்தில் முதல் முறையாக கலையரசன் நடிக்கவுள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவாரா'. ஏற்கனவே இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை தொடர்ந்து இப்போது கலையரசனும் தேவாரா படத்தில் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர்., ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதன் முதல் பாகம் ஏப்ரல் 5 2024 அன்று வெளியாகிறது