வெளியானது சைரன் படத்தின் டீசர்!
ADDED : 709 days ago
அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற பிக்பாஸ் தொடரில் சைரன் படத்தின் டீசர் வெளியிட்டனர். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் மற்றும் ஜெயில் கைதி கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்கள் . மேலும், இப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.