‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் குறித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட பதிவு
ADDED : 695 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஜிகர்தண்டா 2 படம் சிறப்பாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான புத்திசாலித்தனமான படைப்பு. இப்படத்தின் இரண்டாம் பாதி எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கிறது. இப்படம் சினிமாவுக்கான மரியாதையை உயர்த்தி உள்ளது. லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசை மிரட்டலாக உள்ளது என்று படத்தை பாராட்டி இருக்கிறார் ஷங்கர்.