மூன்று நாட்களில் ரூ.240 கோடி வசூல்: டைகர்-3 படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 692 days ago
'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப், எம்ரான் ஹஸ்மி ஆகியோர் இணைந்து 'டைகர்' மூன்றாம் பாகத்தில் நடித்துள்ளனர். மனிஷ் சர்மா இயக்கிய இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
டைகர்-3 முதல் மூன்று நாட்களில் உலகளவில் ரூ.240 கோடி வரை வசூலித்ததாக அறிவித்துள்ளனர். மேலும், சல்மான் கான் சினிமா வரலாற்றில் முதல் மூன்று நாட்களில் அதிக வசூலித்த படம் இதுதான் மற்றும் டைகர் சீரியஸ் படங்களில் இப்படம் தான் முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.