உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூஜையுடன் தொடங்கிய பட்ஜெட் குடும்பம் சீரியல்!

பூஜையுடன் தொடங்கிய பட்ஜெட் குடும்பம் சீரியல்!

சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் பட்டியலில் பொதிகை சேனலும் போட்டிக்கு வரவுள்ளது. சில தினங்களுக்கு முன் ராதிகா சரத்குமாரின் தாயம்மா சீரியல் பொதிகை சேனலில் ஒளிபரப்பாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த தொடர் வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குடும்பம் என்ற புதிய தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், குறிஞ்சி நாதன் ஹீரோவாகவும், வில்லி நடிகையான சுஷ்மா நாயர் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஷூட்டிங் இன்றைய தினத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !