உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். பிறமொழிகளில் உள்ள கலைஞர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்தப் பிரச்னை குறித்து, தேசிய மகளிர் ஆணையம், தானாக முன்வந்து விசாரணையை துவக்கியது. பெண்ணை அவமதிக்கும் வகையில், அநாகரிகமாக பேசியது தொடர்பாக, மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !