உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் சாதனை படைத்த ஷாரூக்கானின் 'ஜவான்'

ஓடிடியில் சாதனை படைத்த ஷாரூக்கானின் 'ஜவான்'

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே இப்படத்திற்கு ஓடிடி தளத்திலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஓடிடி நிறுவனம், “அனைத்து மொழிகளிலும் வெளியான இரண்டே வாரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படம் 'ஜவான்',” என அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவில் வெளிவந்த படங்களில் 1000 கோடி வசூலைக் குவித்த ஒரே படம் 'ஜவான்' மட்டுமே. தியேட்டர்களில் வசூல் சாதனை, ஓடிடியிலும் சாதனை என ஒரு படம் வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !