கவர்ச்சிக்கு தாவிய லாவண்யா மாணிக்கம்
ADDED : 704 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், கலர்ஸ் தமிழின் அம்மன் ஆகிய தொடர்களின் மூலம் தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார் லாவண்யா மாணிக்கம். பகாசூரன் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமான அவர் தொடர்ந்து சினிமாக்களில் கிளாமர் ரோல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பம் முதலே கவர்ச்சி காட்டி வந்த அவர், சமீப காலங்களில் சற்று தூக்கலாகவே கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் 'ரொம்ப ஓவரா இருக்கே' என கமெண்ட் அடித்து வருகின்றனர். இது ஒரு வெப்சீரிஸிற்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.