வாரணாசியில் தரிசனம் செய்த நீலிமா ராணி
ADDED : 682 days ago
சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி ஒருகாலத்தில் சீரியல்களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தற்போது சொந்தமாக சீரியல் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தனது குழந்தைகளை பொறுப்பான தாயாக கவனித்து வரும் நீலிமா தற்போது வாரணாசிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்துள்ளார். அங்கு பூஜைகள் செய்வதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், 'இந்த பயணம் என் ஆன்மாவுக்காக' என பதிவிட்டுள்ளார்.