உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛விடாமுயற்சி' முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய அஜித்

‛விடாமுயற்சி' முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய அஜித்

மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருடன் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று வந்தது. அங்கு ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமானது. அதோடு தீபாவளிக்கு கூட ஓய்வெடுக்காமல் விடாமுயற்சியில் நடித்து வந்தார் அஜித். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது சென்னை திரும்பி உள்ளார் அஜித். அவர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கடுத்து விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துபாய் நாட்டில் தொடங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !