நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம்
ADDED : 758 days ago
ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்தவர் விக்ரமின் மகன் துருவ். அடுத்து இவர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. ஏற்கனவே சில இசை ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார் துருவ். தற்போது அவர் தெலுங்கில் நானி நடித்துள்ள ஹாய் நான்னா என்ற படத்தில் வரும் ஓடியம்மா என்ற பார்டி பாடலை நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவர்களுடன் பாடகி சின்மயி-யும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நானியுடன் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடித்துள்ளார்.