மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
646 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
646 days ago
சென்னை : நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை, மியாட் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகளுக்காக, கடந்த 18ம் தேதி தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என கடந்தவாரம் மருத்துவமனை தெரிவித்தது.
இந்நிலையில் விஜய்காந்த் உடல்நிலை குறித்து தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
646 days ago
646 days ago