நயன்தாரா பிறந்தநாளுக்கு கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்
ADDED : 692 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சுமார் 3 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் கார் ஒன்றைப் பரிசாக அளித்துளளார் கணவர் விக்னேஷ் சிவன்.
“எனது அன்பான கணவரே, மிகவும் இனிமையான பிறந்நாள் பரிசைக் கொடுத்ததற்கு நன்றி, லவ் யூ”, என கணவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் நயன்தாரா.
சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் கணக்கு ஆரம்பித்த நயன்தாரா தற்போது அடிக்கடி அப்டேட்களைப் பதிவு செய்து வருகிறார். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'அன்னபூரணி' படம் நாளை வெளியாக உள்ளது.