உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார்

படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார்

தமிழ் சினிமாவில் 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். குற்றம் 23, மகாமுனி, ரத்தம், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில முக்கிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் தான் சந்தித்த அவமானங்களை பற்றி கூறியதாவது : சினிமாவில் அவமானங்கள் சகஜமானது தான். ஹீரோயின்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு மறுப்பது. ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி நடந்து முடிந்த பின்பும், ஹீரோயின்கள் நீக்கப்படுவது அதிகம் நடக்கின்றன. எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு அழைக்கிறோம் என்றார்கள். ஆனால், அழைக்கவே இல்லை. ஒரு நாள் அந்தப் படத்தின் மேனேஜர் போனில் அழைத்து, அந்தப் படத்தில் பெரிய ஹீரோயின் ஒருவர் நடிக்கின்றார். நீங்கள் இல்லை என கூறினார். நான் நீக்கப்பட்டதற்கானக் காரணம் இன்னும் எனக்கு தெரியவில்லை. பல நடிகைகள் தாங்கள் சந்திக்கும் அவமானங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !